இறைவர் : அருள்மிகு வேதகிரிஸ்வரர்
இறைவி :அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன்
இறைவர் : அருள்மிகு பக்தவச்சலேஸ்வரர் (தாழக்கோவில்)
தல மரம் : வாழை மரம் (கதலி)
தீர்த்தம் : சங்குத் தீர்த்தம்
திருக்கழுக்குன்றம் புராதான சிவஸ்தலம். இந்த திருமலை கோயிலில் வேதகிரீஸ்வரர் வாழைப்பூ குருத்து போல சுயம்பு மூர்த்தியாக தோன்றியவர்.இந்த உருவம் சிதராமல் இருக்க கேதா யூகத்தின் தொடக்கத்திலேயே சிவலிங்கத்தை கவசமாக தரித்திருக்கிறார்கள் .
இது திருமலையில் மூலஸ்தானம் மூன்று பிரமாண்ட கற்பாறைகளால் ஆக்கப்பட்டிருக்கிறது. கற்பகிரகத்தின் உட்பக்கத்தில் மேற்கில் சோமாஸ்கந்தர்,விஷ்ணு , பிரம்மா உருவங்களும் வடக்கு பக்கத்தில் யோகா தக்ஷிணாமூர்த்தி தென்முக பிரமனும் மார்க்கண்டேயர் சிவலிங்க பூஜையும், தெற்கில் நந்திகேஸ்வரர் சண்டிகேஸ்வரர் உருவங்களும் செதுக்கப்பட்டிருக்கின்றன.
இத்திருமலை வேதகிரீஸ்வரரை பிரம்மா, விஷ்ணு , இந்திரன், அஷ்ட வசுக்கள், கோடி ருத்திரர்கள் , நந்தியம் பெருமாள், அஷ்ட கழுகுகள் பூஜித்து முக்தி பெற்றனர்.
இத்தலத்திற்கு உருத்திரகோடி , பிரம்மபுரி , ஆதிநாராயண புரம் , நந்திபுரி , இந்திரபுரி ,முதலிய காரண பெயர்கள் உள்ளன.
திருமலை வேதகிரீஸ்வரர் பெருமானை இந்திரன் 12 வருடத்திற்கு ஒரு முறை இடி பூஜை செய்யும் தளம்..
ஆண்டில் ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், நவராத்தியில் வரும் நவமி ஆகிய மூன்று நாட்களில் மட்டுமே அம்பாளுக்கு முழு அபிஷேகம் செய்யப்படுகின்றது.
12 வருடத்திற்கு ஒரு முறை கன்னி லக்னத்தில் குரு பிரவேசிக்கும் காலத்தில் லட்ச தீப விழா நடைபெறும்.
தாழ கோயிலின் தென்மேற்க்கே கதலி காடாயிருந்து அதை தோண்டிய பொது வண்டுகளால் சூழப்பெற்ற விநாயகர் கிடைக்கப்பெற்று அந்த இடத்திலேயே வண்டுவன விநாயகர் ஆலயம் அமைக்கப்பட்டது.
மலை அடிவாரத்தில் அகத்தியர் பிரதிஷ்டை செய்த சித்தார்த்த கணபதி கோயில் உள்ளது..
திருமலை வேதகிரீஸ்வரர் கருவறைக்கு எதிரில் இருக்கும் நந்தி இங்கு இல்லாமல் இருப்பது சிறப்பு அம்சமாகும்.
ருத்திர கோடியர் பூசித்த கோயில் மலையின் தென்கிழக்கே மூலையில் ருத்திர கோயில் என்னும் பெயருடன் இருக்கிறது.
திருஞான சம்மந்தர் மலையை வலம் வந்து தமிழ் மாலை பாடிய தளம்..
ருத்திர கோடியர் பூசித்த கோயில் மலையின் தென்கிழக்கே மூலையில் ருத்திர கோயில் என்னும் பெயருடன் இருக்கிறது.
திருநாவுக்கரசர் “கற்பகத்தை கண்ணார கண்டேனே” என்றும் “கழுக்குன்ற தூச்சியாய் கடவுளே” என்றும் போற்றியுள்ளார்..
தெய்வீகம் கமழும் ஊர்களை மூன்று வகையாக குறிப்பிடுவது வழக்கம், அவை மூர்த்தி சிறப்பு, தல சிறப்பு, தீர்த்த சிறப்பு இவை மூன்றிலும் இத்திருக்கோவில் சிறந்து விளங்குகிறது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு பிறக்கும் அதிசயமான தீர்த்தம் (Sangu Theertham). இன்றும் இந்த அதிசயம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது மூலிகை கலந்த தடாகம் என்பது குறிப்பிடத்தக்கது. சித்தபிரமை உள்ளவர்கள் இத்தீர்த்தத்தில் மூழ்கிவிட்டு இறைவனை மனமுருக வேண்டினால் முழுமையாக குணமடையலாம்..
ஒரு நாவால் உலகை ஆண்ட திருஞாவுக்கரசரும், சீர்காழிப் பிள்ளையார் திருஞானசம்பந்தரும், தம்பிரான் தோழர் சுந்தர மூர்த்தி சுவாமிகளும், தெய்வத்திருவாசகம் தந்த மாணிக்கவாசகரும், அருந்தவ புதல்வர் அருணகிரிநாதரும் பைந்தமிழ்ப் பாவேந்தர் பட்டினத்தாரும் காதலால் கசிந்து உருகிக் கண்ணிர் மல்கப் பாடியுள்ள திருத்தலம்.
மலைமேல் உள்ள வேதகிரீஸ்வரர் கருவறையில் அனைத்து தெய்வங்களும் உள்ளனர். ஈசனை இந்திரன் பூஜிக்கும் தலம் இது. இந்திரன் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சன்னதியில் நுழைந்து இறைவனை வலம் வந்து, பூஜித்து விட்டுச் செல்வார். இதற்கு ஏற்றாற்போல் கோயில் விமானத்தில் ஒரு துவாரம் உள்ளது. அதன் வழியேதான் இந்திரன் இடி உருவில் வந்து செல்வார். இடி இறங்குவதால் இவ்வாலயத்திற்கு எந்த சேதமும் ஏற்பட்டதில்லை.
முனி பத்தினியை கொன்ற பாவம் நீங்க வேதகிரியை அடைந்து திருமாள் பூசை செய்த ஸ்தலம் .
இத்தலத்தின் முதல் யுகத்தில் சண்டன்-பிரசண்டன் என்ற இரு கழுகுகளும், இரண்டாவது யுகத்தில் சம்பாதி-சடாயு எனும் இரு கழுகு அரசர்களும் மூன்றாவது யுகத்தில் சம்புகுந்தன், மாகுந்தன் எனும் இருவரும் சாபம் பெற்று கழுகுகளாக பிறந்து முக்தி பெற்றனர்.
வேதமே மலையாக காட்சியளிப்பதால் கிரிவலம் வந்து இறைவன் அருளை பெற வேண்டும் என்று நால்வரால் தொடங்கப்பட்டது கிரிவலம்.